2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தெற்கில் 8 மாணவர் பலி எட்டுப் பேரைக் காணவில்லை

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, தென் மாகாணத்தில் எட்டு மாணவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் எண்மர் காணாமல் போயுள்ளதாக, தென்மாகாண கல்வித் திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாஞ்சலி கமகே தெரிவித்தார்.

பலியானவர்களில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அறுவரும் ஹம்பாந்தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த எண்மரே காணாமல் போயுள்ளனர். காணாமல் போன எண்மரும், தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட மொரவக கனிஷ்ட வித்தியால மாணவர்களெனவும், இவர்கள், கொடபொல மண்சரிவில் சிக்கியே காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .