2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தில்ருக்ஸி சூரியாரச்சி தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார் - மங்கள

Super User   / 2010 மார்ச் 07 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீபதி சூரியாரச்சியின் மனைவியான தில்ருக்ஸி  அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள எடுத்த முடிவு குறித்து சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர தமது ஏமாற்றத்தையும்,ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அவர் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார் என்றும் மங்கள சமரவீர டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார். 

வான விபத்தொன்றில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மனைவியான தில்ருக்ஸி சூரியாரச்சி  ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தில்ருக்ஸி நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையும் சந்தித்திருந்தார். 
 
எமது கொள்கைகளில் திருப்தியில்லை என்று சொன்னால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பதாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .