2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நான்கு வயது சிறுமி வாகன விபத்தில் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வடலியடைப்பு பண்டத்தரிப்பில் சிறுமி ஒருவர் நேற்றிரவு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி உறவினருடன் வீதியால் வந்துகொண்டிருந்தபொழுது, வாகனமொன்று மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடலியடைப்பு பண்டத்தரிப்பில் நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

புவனேந்திரன் றுஷானி என்ற 4 வயதுடைய சிறுமியே மேற்படி விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மல்லாகம் நீதவான் மேற்கொண்டிருந்தார்.  பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .