2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நோர்வேயில் இலங்கை தூதரகம் தாக்குதல்;8 தமிழர்களுக்கு எதிராக வழக்கு

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தை கடந்த வருடம் தாக்கியமை தொடர்பில் எட்டு  இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரசன்னா பற்குணம், அந்தோனி ஜோகானந்தன் தேவராஜ், கிருஷ்ணகுமார் தர்மலிங்கம், இன்பராஜா தேவராசா, சஜிந்தன் பார்வதிதாசன், விதுசன் சுரேஷ், ஜெஸ்வந் புஸ்பராஜா, கௌதம் கருணாகரன் ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த எட்டுப் பேரில் ஒருவர் நோர்வேயில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டுள்ள எட்டு பேரில் ஒருவரைத் தவிர ஏழு பேருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக  இதுவரையில் எவரும் முன்வரவில்லை.

இதேவேளை, நோர்வேயிலுள்ள தமிழ்ச் சமூகம் இந்தத் தாக்குதலை கண்டித்திருப்பதுடன்,  இவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .