2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நாளை பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெறுமா?

Super User   / 2010 மே 03 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஏற்கனவே தீர்மானித்த படி நாளை நடைபெறும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்நீதிமன்ற விசாரணைகளை இராணுவம் ஒத்திவைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை இடம்பெறவுள்ள நாடளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளதால், இராணுவ நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளார். எனினும் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் நீதிமன்ற விசாரணைக்கு சமூகமளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள  இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு தான் சமூகமளிக்கமாட்டேன் என்று  ஜெனரல் சரத் பொன்சேகா இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவிற்கு அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .