Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை விநியோகிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட முறுகலில் பெண்கள் இருவர் காயமடைந்த சம்வமொன்று, நிவித்திகல - பாத்தகடை பகுதியில், இன்று (04) இடம்பெற்றுள்ளது.
காயங்களுக்கு உள்ளான பெண்கள், வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில், வௌ்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த மக்களுக்கு, உலருணவு பங்கிடுவதற்காக வருகைத் தந்தவர்கள் உலர் உணவுகளைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது, நிவாரணப் பொருட்களை பெற வந்தவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது இப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவர் கத்தியை விசிறிய போது, பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள், பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிவித்திகலை பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago