2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் ஆளும் கட்சி - மு. கா. ஆதரவாளர் மோதல் : பொலீஸாருக்கு இதுவரை தகவல் இல்லை?

Super User   / 2010 மார்ச் 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

புத்தளத்தில் இடம்பெற்ற இரு அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதல் குறித்து இதுவரை தனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தமிழ் மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

அது பற்றிய விவரங்கள் கிடைத்தவுடன் எம்முடன் தொடர்புகொள்வதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மிரர் இணையதலத்துக்கு கிடைத்த தகவலின்படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும்,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடா பகுதியில் இடம்பெற்ற இம்மோதல் குறித்து கற்பிட்டி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதியிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து மேலதிக தகவல்களைப்பெறுவதற்காக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நூர்டீன் மஷூர்,அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் தமிழ்மிரர் தொடர்புகொண்டது.

எனினும் இதுவரை அவர்களுடன் தொடர்புகொள்ளமுடியவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .