2021 ஜூன் 21, திங்கட்கிழமை

புத்தளம் மாவட்ட சிறுபான்மை இன வேட்பாளர் அனைவரும் தோல்வி

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

புத்தளம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு சிறுபான்மை இனத்தவர் எவருமே தெரிவு செய்யப்படவில்லை என தமிழ்மிரர் இணையதளத்துக்கு அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் 26,489 வாக்குகளுடன் தோல்வியடைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.யெஹியா 17,571 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

ஐக்கிய தேஎசியக்கட்சியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் டி.எம் இஸ்மாயீல் 12,021 வாக்குகளுடன் தோல்வியடைந்துள்ளார்.

தமிழர்கள் எவரும் இங்கு போட்டியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Monday, 12 April 2010 10:02 PM

    பாயிஸின் அரசியல் சர்ச்சைக்கு உரியது ஆனால் கொழும்பிலே கூட தமிழ் முஸ்லிம் வாக்கு பலம் குறைந்தது, மிரட்டலும் வன்முறை பயமும் வாக்களிக்க பயந்ததினாலும் தான் மேலும் இன அடிப்படையிலேயே விருப்பு வாக்குகள் அளிக்க படுகின்றன என்பது உண்மை, தமிழ் பேசும் மக்கள் ஒரு விருப்பை தலைவருக்கு வழங்கினாலும் மாற்றார் ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை. தனித்து போட்டியிட்டு தோற்றாலும் அதில் ஓர் அர்த்தமிருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .