2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பம்பலப்பிட்டியில் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திப்பு-நீதிமன்றம்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி கடலில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிடைத்திருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பம்பலப்பிட்டி கடலில் வைத்து  இளைஞர் ஒருவரை  நான்கு சந்தேக நபர்கள் பொல்லால் தாக்க முற்பட்டபோது, நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.  

இந்தச் சம்பவம் தொடரில் பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க மறுத்துள்ள கொழும்பு கோட்டை நீதவான், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் உத்தரவிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .