2026 மார்ச் 19, வியாழக்கிழமை

முக்கிய வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

Freelancer   / 2024 ஜூன் 15 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (15) முதல் கொஹுவல சந்தி வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் வாகன போக்குவரத்து 02 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து பிலியந்தலை செல்லும் வீதியில் கொஹுவல சந்தியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது ஓகஸ்ட் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தை எளிதாக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .