2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மேதின கொண்டாட்ட ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் முதலாம் திகதி மேதினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின ஊர்வலக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நண்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இடம்பெறவிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் மேதினக் கூட்டம் குறித்து கூடி ஆராய்ந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்ஹ தலைமையில் பொறளை 'கம்பெல் பார்க்' இல் நடைபெறவிருக்கிறது.

இடதுசாரி முன்னணி  கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேதினக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்திருக்கும் அதேவேளை, இலங்கை பெருந்தோட்ட ஊழியர் சங்கத்தின் மேதினக் கொண்டாட்டங்கள் கொட்டகலவில் இடம்பெறவிருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .