2021 ஜூன் 19, சனிக்கிழமை

மன்னார்,அடம்பனில் தாக்கப்படவில்லை ; தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு

Super User   / 2010 மார்ச் 28 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE மன்னார்,அடம்பனில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக்கூறப்படும் செய்தியில் உண்மை எதுவும்  இல்லை என தமிழ் தேசியகூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன்னர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்றார்.

தற்போது மன்னாரில் தங்கியிருக்கும் அடைக்கலநாதனிடம் அடம்பனில் மக்கள் தக்குதல் நடத்தியது குறித்து தமிழ்மிரர் இனையதளம் கேள்வி எழுப்பியது.

தாம் கடந்த சிலநாட்களில் அடம்பனுக்கு செல்லவில்லையென்றும்,இது ஒரு பொய்யான செய்தி என்றும்  அவர் மறுப்புத்தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .