2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் உடுநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சுதந்திரக்கட்சியில் இணைவு

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித்தலைவர் முஷர்ரப் மர்ஜான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார்.

இத்தகவலை தமிழ்மிரர் இணையளத்துக்கு அவர் நேற்று இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கண்டி மாவட்ட முஸ்லிம்களின் கல்வி  அபிவிருத்திக்காக தாம் பாடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அமைச்சர் பைஸர் முஸ்தபா தலமையில் தான் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் மாஸ்டரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .