2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

'மஹிந்தவை பிரதமராக்குங்கள்'

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமர் பதவியில் அமர வையுங்கள்' என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அகலவத்தைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய குமார வெல்கம, 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரும் ஒன்றிணைந்துகொண்டு, அரசாங்க தரப்பிலிருக்கும் மேலும் சிலரையும் இணைத்துக் கொண்டால், சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .