2025 ஜூலை 19, சனிக்கிழமை

யானை தாக்கி இருவர் மரணம்

Janu   / 2024 மார்ச் 17 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை   யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.

இரு வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண  விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம்.நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டுள்ளனர் . 

ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது  45) என்பவர்சனிக்கிழமை  (16),  மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான நபர்,  நண்பர் ஒருவருடன் நள்ளிரவில் , வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை  குளத்தின் ஓரமாக இருந்த  மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

இரு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின்  பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X