2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்

Super User   / 2010 மார்ச் 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகம் இன்று
காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடமாகண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மேற்படி அலுவலகத்தை திறந்துவைத்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இல.61/1 குறுக்கு வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியிலேயே இந்த
அலுவலம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில், சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தலைமையத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு நலன்புரி அமைச்சின் செயலாளர் சுனில்  எஸ்.ஸ்ரீசேன, யாழ் 51வது படைப்பிரிவு தலைமை அதிகாரி சரத் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .