2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் சாவகச்சேரியில் சகோரர்கள் இருவர் மோதல்;ஒருவர் பலி

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் சாவகச்சேரியிலுள்ள போக்கட்டி எனும் இடத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த அண்ணா மற்றும் தம்பி ஆகியோருக்கு இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், தம்பி அண்ணாவை பொல்லால் அடித்துள்ளார்.

காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட தம்பி சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .