2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நெல்லியடியில் இளைஞன் சுட்டுக்கொலை

Super User   / 2010 மே 03 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நெல்லியடி பருத்தித்துறை வீதியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை, தும்பளையைச் சேர்ந்த  25வயதுடைய மகாலிங்கம் சதீஸன் என்பவரே நேற்றிரவு 7 மணியளவில்  சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

இன்று காலை யாழ். பருத்தித்துறை வீதியில் படப்பிடிப்பு நிலையமொன்றை திறப்பதற்கான ஏற்பாடுகளில் குறித்த இளைஞர் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், மேற்படி இளைஞனின் பெயரைக் கூறி அழைத்துள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .