2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ். பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பு;மாநகரசபையில் குழப்பம்

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் யாழ் மாநகரசபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த மாநகரசபை தீர்மானிக்கிறது என்ற சொற்பிரயோகத்தை அடுத்தே, மேற்படி குழப்ப நிலை ஏற்பட்டது.

புத்தர் சிலையை அமைக்க யாழ் மாநகரசபை எண்ணவில்லை என்பதுடன், இவ்வாறான சொற்பிரயோகம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இவ்வாறான சொற்பிரயோகத்தை பிரேரணையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த யாழ் மாநகரசபை முதல்வர் அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறினார். 

  Comments - 0

 • Jananayakan Saturday, 01 May 2010 01:46 AM

  புத்தர் சிலையால் குழப்பம் நாட்டில் எல்லா இடமும். புத்தருக்கே இது வேதனையாக இருக்கும்.

  Reply : 0       0

  KONESWARANSARO Saturday, 01 May 2010 06:01 PM

  பதவிக்காக எதையும் செய்வார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .