2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்.பல்கலையின் வவுனியா வளாக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Super User   / 2010 மே 04 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வர்த்தக பீட மாணவர்கள் இன்று விரிவுரைகளை பகிஷ்கரித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த மாணவர்களின்  பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், நிர்வாகம் அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தியே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.

வவுனியா உள்வட்ட வீதியிலுள்ள  வளாக விரிவுரை மண்டபத்திற்கு முன்னால் 150 மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .