2026 மார்ச் 26, வியாழக்கிழமை

லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

Freelancer   / 2024 ஜூன் 27 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவரிடம் 25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் ஹீரஸ்ஸகல கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று (26) கைது செய்துள்ளது.

ஹீரஸ்ஸகல கிராம சேவை பிரிவில்  வசிக்கும் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஹிரஸ்ஸகல பிரதேசத்திற்குச் சென்று குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில் பணம் கொடுத்த போது அவரை கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு செய்த பெண்ணின் மகனின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கிராம அதிகாரி இந்தப் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .