2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் காயம்

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரண, ஹத்தரஸ்கொட்டுவ பகுதியில், லொறி ஒன்று மரத்தில் மோதியதில், லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அதில் வந்த மற்றைய நபர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(14) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லொறி சாரதி, காயங்களுடன் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததுடன்,அவருடன் வந்த மற்றைய நபர் பலத்த காயங்களுடன், தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதன்போது, சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹெட்டிபொல பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்ட, 23 வயதுடைய அப்துல் ரகுமான் முகமத் றியாஸ் என, பொலிஸாரின் மேலதிக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது

சம்பவம் தொடர்பில், ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .