2021 மே 13, வியாழக்கிழமை

வேலைக்குச் சமுகமளிக்காத அரச ஊழியருக்கு விடுப்பு

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


கெலும் பண்டார

வெள்ளம் ஏற்பட்ட காலத்தில், கடமைக்குச் சமுகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு, விடுமுறை வழங்குவதற்கு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுத் தீர்மானித்துள்ளது என, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்புமாறு, தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார். அனேகமான இடங்களில், வெள்ள நிலைமை குறைவடையாத நிலையில், ஊழியர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்த அரச ஊழியர்கள் பற்றி நாங்கள் கவனமெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனேக இடங்களில், அவர்கள் இன்னமும் பணிக்குத் திரும்ப முடியவில்லை. பாதிக்கப்பட்ட காலத்துக்காக அவர்களுக்கு, நாங்கள் கடமை விடுப்பை வழங்குவோம். இந்தக் காலப்பகுதி, இடத்துக்கு இடம் மாறுபடும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .