Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு அமைய பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அறவிடப்படும் வரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதற்கமைய, வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக செல்வோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் பதிவினை புதுப்பிப்பதற்காக கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை காணப்பட்ட பதிவு செய்வதற்கான 17,837 ரூபாய் கட்டணம் 3755 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை காணப்பட்ட பதிவினை புதுப்பிப்பதற்கான 16,416 ரூபாய் கட்டணம் 3456 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பானது கடந்த முதலாம் (2019.12.01) திகதியில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago