Freelancer / 2024 ஜூன் 29 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாக நிலத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல், மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. R
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago