2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வெளிநாட்டவரின் வீசாவை நீடிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல்

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால், வெளிநாட்டவர்களின் வீசாக்களை நீடிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறலால் பரவியிருக்கும்  சாம்பல் புகை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரீஸ், பிரிட்டன் மற்றும் பிராங்புறுட்  ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் வீசாக்களை நீடிக்கவிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பி.பி.அபயகோன் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .