Simrith / 2024 மே 21 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்தது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மற்றும் அதற்கு முன் விடுமுறை இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் 373 இராணுவத்தினரை சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து விலகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 minute ago
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
55 minute ago
3 hours ago