2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

18 பெண்களை காதலித்து ஏமாற்றிய நபர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18 இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதுடன் அவர்களிடமிருந்து தங்க நகைகளையும் அபகரித்த 35 வயதான நபர் ஒருவரை ரத்தொட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த பெண்ணொருவர் செய்த புகாரையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இச்சந்தேக நபர் 18 பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததுடன் அவர்களில் நான்கு பேரை திருமணம் செய்ததாகவும் மேலும் நால்வருடன் ஒன்றாக வசித்துள்ளதாகவும் தமது விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நபர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, நான்கு பெண்கள் ரத்தொட்டை பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
 


  Comments - 0

 • Kuna Friday, 03 September 2010 07:44 PM

  இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளிடம்தான் பெண்களும் அதிகமாக வழிகின்றனர்.

  Reply : 0       0

  nnassm Friday, 03 September 2010 09:20 PM

  அட நம்ம ஜெமினி கணேசன் தோற்று விட்டார். ,இவரல்லோ காதல் மன்னன்.

  Reply : 0       0

  Rohan Saturday, 04 September 2010 02:49 AM

  கவனம். இந்த செய்தியை பார்த்துவிட்டு அவனிடம் ஏதோ இருக்கு போல என்று மேலும் பல பெண்கள் ஓடிவந்தாலும் ஆச்சரியமில்லை.

  Reply : 0       0

  srikant Saturday, 04 September 2010 09:26 PM

  நவீன காதல் மன்னன்,பெண்கள் பொய்களை மிக அதிகமாக நேசிக்கின்றனர். கதாநாயகன்களை கற்பனை செய்து சேலைக்கடை பொம்மைகள் போன்றவர்களை தேடுகின்றனர். தும்மக்கூடாது, இருமக்கூடாது ...காரில் பவனி வரவேண்டும், இலட்சக்கணக்கில் சம்பாதிக்கவேண்டும்.இதை எல்லாம் ஒருவர்க்கு தெரியாமல் மற்றவர் இரகசியம் காப்பாற்றுவதானால் எளிது விளம்பரங்களை நம்பி அக்கம் பக்கம் இருக்கின்றவர்களுக்கு தலை கனமாக நடந்து கொள்வர். இக்கரைக்கு அக்கரை பச்சை. வெளியூர் மாப்பிள்ளை கெளரவம் மாதிரி. வேறு யாரும் தட்டிக்கொண்டு போய்விடலாம் என்று ஒருவரும் அறியா!

  Reply : 0       0

  xlntgson Sunday, 05 September 2010 08:37 PM

  எல்லா பெண்களுமே ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது, சினிமா & சின்ன திரை கலாச்சாரத்தில் பாதிக்கப்படாத பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எமது கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றவர்கள் 'உனக்கு மாப்பிள்ளை இங்கே இல்லை வெளி நாட்டில் தான் இருக்கின்றான்' என்பார்கள், அதை போலவே நல்ல வரன்களுக்கு 'உனக்கு பெண் ஒருத்தி இந்த நாட்டிலேயே இல்லை' என்று கூறிவிடுவர். ஆரம்பித்தது தலைக்கனம்! இணையங்களில் தேடத்துவங்க. ஆனால் அருகில் இருப்பவரை பார்த்தால் கூட கற்பு பறிபோய்விடும் போல் முறைப்பர், ஏமாறாமல் முடியுமா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .