2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்திய பாராளுமன்ற தூதுக்குழு நாளை இலங்கை விஜயம்

Super User   / 2009 ஒக்டோபர் 09 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று இவ்வாரம் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளது.

நாளை சனிக்கிழமை 10ம் திகதிக்கும் 14ம்  திகதிக்கும் இடையில் இத்தூதுக்குழு இலங்கை வரத்திட்டமிட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் திமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற,  உறுப்பினர்கள் தூதுக்குக்குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்

.இலங்கையிலுள்ள தமிழ் அகதிகளின் நிலைமை குறித்து கலந்துரையாடுவதே இவர்களது பயணத்தின் நோக்கம் என்றும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .