2021 ஜூன் 16, புதன்கிழமை

கிழக்கு முதலமைச்சர் பதவி;தகுதிதியானவரை நியமிக்க கருணா கோரிக்கை

Super User   / 2009 ஒக்டோபர் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியறிவும்,தலைமைத்துவ பண்பும் உள்ள ஒருவரே கிழக்கு மாகாண முதலமைச்சராக வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய முதலமைச்சர் பிள்ளையான் பதவி நீக்கம் செய்யப்பட்டு,தகுதியான ஒருவர் அந்த இடத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.

டெயிலி மிரர் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் பிள்ளையான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும்  அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த  போதிலும் அது சாத்தியமாகவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .