2021 ஜூன் 16, புதன்கிழமை

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க ஆணையாளர் முடிவு

Super User   / 2009 ஒக்டோபர் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல்,ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா இன்று தெரிவித்தார்.

எதிர் கட்சிகளுடனான சந்திப்பின் போதே தாம் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய,பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஸனலி ஆகியோர் எதிர்கட்சிகளின் சார்பில் தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .