2021 ஜூன் 16, புதன்கிழமை

ஆஸி.கடலில் மூழ்கிய இலங்கை அகதிகளை தேடும் பணிகள் வாபஸ்

Super User   / 2009 நவம்பர் 04 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவின் வட மேற்கு கடற்பிராந்தியத்தில் அரசியல் புகலிடம் கோரிவந்தவர்களின் படகு மூழ்கியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆகாய,கடல் மார்க்க தேடுதல் நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் இன்று
வாங்கிக்கொண்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 39 பேரைக்கொண்ட அகதிகள் படகு கடும் புயல் காற்றின் காரணமக மூழ்கடிக்கப்பட்டது.

அதில் பயணம் செய்த 12 பேர் கொல்லப்பட்டனர்.சுமார் 27 பேர்வரை பகாமாஸ் கப்பலொன்றினால் காப்பாற்றப்பட்டனர்.

இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.

தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் பணிகள் பயனளிக்கக்கூடியவையாக இல்லை என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரெண்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .