2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வவுனியா முகாம்;வெளியேறிய மக்களின் உடம்பில் காயம்

Super User   / 2009 டிசெம்பர் 04 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அனுமதியுடன் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து தமது சொந்த இடங்களை நோக்கிச்சென்ற  இடம்பெயர்ந்த மக்களின்  ஒரு பகுதியினரின் உடம்பில் துப்பாக்கிச்சூட்டுக்காயங்கள்  காணப்பட்டதாக யாழ் மாவட்ட வைத்திய அதிகாரியான ஸ்.ஜமுனானந்தா  தெரிவித்துள்ளார்.

10வயது முதல் 18வயதுடைய மாணவர்களின் உடம்பில் குண்டுகள் காணப்பட்டதாகவும், அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே இது தொடர்பில் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தங்களது உடம்பில் குண்டு காணப்பட்டதுடன், உடனடியாகத் தாம் கதிரியியக்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறித்த மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பொதுமக்கள் வெளியேறுவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த மாதம் முதலாம் திகதி அனுமதியளித்திருந்தது.


வவுனியா முகாம்;வெளியேறிய மக்களின் உடம்பில் காயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .