2021 ஜூன் 16, புதன்கிழமை

கச்சைதீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது:-கருணாநிதி

Super User   / 2009 டிசெம்பர் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சைதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டபோது, அது  தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

கச்சைதீவு விடயம் தொடர்பில் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் ஊடகவியலாளர்களுக்கு நேற்று கூறினார்.

கச்சைதீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை உண்டெனக் கூறிய கருணாநிதி, ஆனால் இலங்கை இந்த ஒப்பந்தத்தை மீறுகிறதெனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கச்சைதீவு விடயம் முடிந்துபோன ஒன்றெனவும், அது தொடர்பில் மீள்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படாதெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்திய ராஜ்ய சபாவில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .