2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை மீனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்

Super User   / 2009 டிசெம்பர் 14 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்பகுதியில் காணாமற்போன இலங்கை மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாக கடற்றொழில் பிரதியமைச்சர் நியுமல் பெரேரா தெரிவித்தார்.

இந்திய அதிகாரிகளின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்வதாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்பரப்பினுள் நுழைந்த இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை கடற்றொழில் பிரதியமைச்சர் நியுமல் பெரேரா மறுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .