2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அடை மழை, வெள்ளப்பெருக்கு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 15 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைத்த அறிக்கையின்படி பல வீதிகள்  வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மட்டக்களப்புக்கும், கல்முனைக்கும் இடையிலான பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடிப் பிரதேசம் வெள்ளத்தினால் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அந்த மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருப்பதாவும் அந்த நிலையம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .