2021 ஜூன் 16, புதன்கிழமை

பிரபாகரனின் மகள் சடலத்தை கண்டெடுக்கவில்லை:உதய நாணயக்கார

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவின் சடலத்தை தாம்  கண்டெடுக்கவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தூள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்ரனியின் சடலத்தை மாத்திரமே தாம் கண்டெடுத்ததாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
எனினும், பிரபாகரனின் குடும்பத்தைச் சேர்ந்த வெறொவரின் சடலத்தையும் கண்டெடுக்கவில்லையெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், துவாரகாவின் உருவத்தை ஒத்ததான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் யுத்த பிரதேசத்தில் காணப்பட்டதாக கூறி,  சில இணையத்தளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்ததாகவும்  இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .