2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்: எதிர்க்கட்சி நடவடிக்கை

S.Renuka   / 2025 ஜூலை 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு விசாரணையும் இல்லாமல் சிவப்பு அறிவிப்புகளின் கீழ் 323 கொள்கலன்களை விடுவித்ததற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்களில் தனித்தனியாக புகார்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ஊடகம் உன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன்,  அடுத்த வாரம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) புகார் அளிப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, முறையான விசாரணை இல்லாமல் இந்தக் கொள்கலன்களை விடுவித்ததை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையம், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கண்டறிய தடயவியல் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

எனவே, இது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் பரிசீலித்த பிறகு முறையாக புகார் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கருதுகிறது.

கூடுதலாக, குடிமக்கள் மீது இது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கருதுகிறது என்று மேற்கூறிய மூத்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .