2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து அரசாங்கத்திடம் ஐ.நா கேள்வி

Super User   / 2009 டிசெம்பர் 21 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் 3 சிரேஷ்ட தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவிலுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனவிரட்னவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளர் பிலிப் அல்ஸ்ரர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆங்கிலப்  பத்திரிகைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .