2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வடகொரியாவிலிருந்து இலங்கைக்கே விமானம் பயணித்ததாக விமான பணியாளர் தகவல்

Super User   / 2009 டிசெம்பர் 24 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவிலிருந்து இலங்கைக்கே ஆயுதங்கள் எடுத்துவரப்பட்டதாக  தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள  விமானப் பணியாளர்கள்  தெரிவித்திருப்பதாக தாய்லாந்து நாட்டு ஊடகங்கள் நேற்று  செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவிலிருந்து  ஈரானுக்கு ஆயுதங்கள் எடுத்துவரப்படவில்லையெனவும்
தாய்லாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடகொரியாவிலிருந்து ஆயுதங்களுடன் வந்த விமானம்
இலங்கைக்கானது அல்லவென்று இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

தாய்லாந்து விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக குறித்த விமானம்
தரித்திருந்தபோது கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .