2021 ஜூன் 16, புதன்கிழமை

கென்டர்பரி அதிமேற்றிராணியாரின் நத்தார் வாழ்த்து செய்தி

Super User   / 2009 டிசெம்பர் 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளில் இடம்பெறும்  யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இன்னமும் பாதிப்பை எதிர்நோக்கிவருவதாக அங்கிலிக்கன் திருச்சபையின்  அதிமேற்றிராணியார் கென்ர்டர்பரி டாக்டர் ரொவன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

நத்தார்ப் பண்டிகையை முன்னிட்டு இணையத்தளமொன்றிற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இன்னமும் பாதிப்பை எதிர்நோக்கிவருவதுடன் ,
துன்பப்படும் சிறுவர்கள் கடவுளை நிந்திப்பதாகவும் அவர் கூறினார்.

சிறுவர்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது, பாலியல் சேஷ்டைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தாங்கிக்கொள்ளமுடியாதெனவும் ரொவன் வில்லியம்ஸ்  குறிப்பிட்டார்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் இன்னும் தொடர்வதாகவும் ரொவன் வில்லியம்ஸ்
சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .