2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவு: பௌத்த தேரோ பொலிஸாரால் கைது

Super User   / 2009 டிசெம்பர் 27 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசாபிமானியமைப்பின்  தலைவர்  தம்பர அமில தேரர்  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தம்பர அமில தேரரிடம் விசாரணை நடத்துவதற்காகவே
கைதுசெய்யப்பட்டுள்ளாரென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார். அத்துடன், அரசாங்கம்
பழிவாங்கும் நோக்கத்துடனையே தம்பர அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும்
விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, தேரருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக
கூறிய பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன,  ஹொறன, குளியாப்பிட்டி ஆகிய
பகுதிகளில் தம்பர அமில தேரர் நிதி சேகரித்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .