2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சரத் பொன்சேகாவிடம் நஷ்டஈடு கோரி வசந்த கரன்னாகொட கடிதம்

Super User   / 2009 டிசெம்பர் 30 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடுகோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்திருந்ததாக வசந்த கரன்னாகொட கடிதத்தில் 
சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், 14 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால், சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் வசந்த கரன்னாகொட  தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .