2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கைக்கான பொருளாதார ஆலோசகராக முன்னாள் தாய்லாந்து பிரதமர் ; அரசு மறுப்பு

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பொருளாதார ஆலோசகராக தாய்லாந்தின் முன்னாள்ப் பிரதமர் தக்ஷின் சினவத்ரா நியமிக்கப்பட்டுள்ளாரென தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்தச் செய்தி ஆதாரமற்றதெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசியூடாக நேற்று கலந்துரையாடியிருந்ததுடன் , இவர்கள் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால கூட்டுறவை வலுப்படுத்துவது தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .