2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

நாமல் - சுமந்திரன் சந்திப்பு

Freelancer   / 2025 நவம்பர் 16 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ நேற்று (15) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பொதுப் பேரணி குறித்து விளக்குவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரைத் தாம் சந்தித்தார் என்று சந்திப்பின் பின்னர் நாமல் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமை மற்றும் எதிர்க்கட்சிப் பேரணியில் முன்னிலைப்படுத்த விரும்பும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் நாமல் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் பேரணியில் பங்கேற்காது என்றாலும், எதிர்க்கட்சியின் முக்கிய அங்கமான அந்தக் கட்சிக்கு இந்த விடயம் குறித்துத் தெரியப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X