2021 ஜூன் 16, புதன்கிழமை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு 2009 நோபல் சாமாதான விருது

Super User   / 2009 ஒக்டோபர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே நோபல் கமிட்டியினால் 2009ஆம் ஆண்டின்  சமாதானத்துக்கான சர்வதேச நோபல் விருது பெறுநராக அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
 
அல்பிரட் நோபலின் இறுதி சாசனத்துக்கேற்பவும்,அதன் விதி முறைகளுக்கு அமையவும் 1901ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டொகோமிலுள்ள நோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பு,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஒஸ்லோவில் உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த இந்த விருதை  வழங்கி கௌரவிக்கின்றது.

இந்தத் திகதியிலேயே அல்பிரட் நோபல் காலமனார் என்பதுவும்  குறிப்பிடத்தக்கது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .