2021 ஜூன் 16, புதன்கிழமை

கின்னஸ் புத்தகத்தில் சிவப்பு மழை திரைப்படம்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர்களை அடியொற்றி தயாரிக்கப்பட்ட சிவப்பு மழை திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இரண்டு மணித்தியால ஓட்டங்களைக் கொண்ட சிவப்பு மழை திரைப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ஜொக்கிமும், கதாநாயகியாக மீரா ஜஸ்மினும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 12 நாள்களில் தயாரித்து முடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

சிவப்பு மழை திரைப்படம் இந்த மாதம் 14ஆம் திகதி திரையிடப்படவிருக்கிறது.  

இதேவேளை, 1990ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவமொன்று 13 நாள்களில் திரைப்படம்  தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கும் நிலையில், சிவப்பு மழை திரைப்படம் 12 நாள்களில் தயாரித்து முடிக்கப்பட்டதாக சிவப்பு மழை திரைப்படத்தின் இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .