2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அரசாங்க, எதிர்க்கட்சி ஆதரவாளர் மோதல்; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொடவில் அரசாங்க, எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டு அடக்கியுள்ளனர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, காலி சந்தியினூடாக இடையில் குறுக்கிட்ட அரசாங்க ஆதரவாளர்கள்  மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதலின்போது, வாகனங்கள் பல சேதமாக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அரசாங்க, எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கிரிபத்கொடவில் இன்று காலை மோதல் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, நேற்று நாவலப்பிட்டியவில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி தெரிவித்தது.


.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .