2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் பிரபாகரனுக்கு சொந்தமான ஆயுதம் கண்டுபிடிப்பு

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமானதென நம்பப்படும் ஆயுதங்கள்  வெள்ளிமுல்லிவாய்க்கால் பகுதியில்  நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனால் பயன்படுத்தப்பட்டுவந்த ஆயுதமான எம்- 16ஏ2 ரக துப்பாக்கி மற்றும்   கிரனைட் லோஞ்சர்  போன்றனவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியாவுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் லியுக்  தெரிவித்தார்.

குறித்த ஆயுதங்கள் 15அடி ஆழமுடைய குழியில் சடலத்திற்கு அருகில் புதைத்துவைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வவுனியாவிலுள்ள பொலிஸ் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .