2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க மட்டு மேயர் தீர்மானம்

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க மட்டக்களப்பு மாவட்ட  மேயர் சிவகீத்தா பிரபாகரன் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கும், சிவகீத்தா பிரபாகரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தமிழ் மக்கள் விடுதலைப்  புலிகள் வட்டாரத் தகவல்கள் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு  தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சிவகீத்தா பிரபாகரன் தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில்  நிபந்தனை விதித்திருப்பதுடன், இதற்கு சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, சரத் பொன்சேகாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்த சிவகீத்தா பிரபாகரன், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .